விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் இம்மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே முன்னணி நடிகர்கள் படங்கள் வெள்ளிக்கிழமைக்கு பதில் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் இந்த படமும் அக்டோபர் 4ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், பகவதிபெருமாள், காளி வெங்கட் , தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்குமார் இயக்கியுள்ளார். இவர் விஜய்சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்த் மேனன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஆகும்.

More News

'96' தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

முதல்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படமான '96' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது

ஜோதிகாவின் புதிய படத்தின் இயக்குனர் அறிவிப்பு

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் பெற்ற வெற்றியால் அதன்பின்னர் பாலாவின் 'நாச்சியார்' உள்பட ஒருசில திரைப்படங்களில் ஜோதிகா நடித்தார்

ஹீரோவாக நடிப்பது உண்மையா? யோகிபாபு விளக்கம்

நல்ல மார்க்கெட்டில் இருக்கும் காமெடி நடிகர்கள் திடீரென ஹீரோவாக ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ஒரு முன்னணி காமெடி நடிகர் ஹீரோ ஆசையினால் காணாமல் போனதை கோலிவுட் அறியும்

சென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் செண்ட்ராயன் வெளியேறியதை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் பலரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

ஓட்டுக்கு பணம்: தேர்தலில் அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா எப்படி காப்பற்றப்பட்டார் என்ற புதிருக்கு பலருக்கு விடை கிடைக்கவில்லை. ஐஸ்வர்யாதான் வெளியேற 99% வாய்ப்பு இருந்த நிலையில்