close
Choose your channels

விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் இம்மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருந்த நிலையில் தற்போது இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே முன்னணி நடிகர்கள் படங்கள் வெள்ளிக்கிழமைக்கு பதில் வியாழக்கிழமை ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் இந்த படமும் அக்டோபர் 4ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், பகவதிபெருமாள், காளி வெங்கட் , தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்குமார் இயக்கியுள்ளார். இவர் விஜய்சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிந்த் மேனன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.