நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,December 02 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது மீண்டும் இந்த ராசியான ஜோடி இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அந்த முக்கிய கேரக்டர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கேரக்டர் என்றும் இன்று முதல் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அஜய்ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More News

இவாங்கா டிரம்புக்கு ஆதார் அட்டை? பொறுப்புடன் பதில் அளித்த UIDAI அலுவலகம்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவாங்காவின்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம்: சென்னை தப்பிக்குமா?

கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சிபிராஜின் 'சத்யா' பிரஸ்மீட்: சில துளிகள்

சிபிராஜ், வரலட்சுமி சரத்குமார், ரம்யாநம்பீசன், ஆனந்த்ராஜ், சதீஷ் உள்பட பலர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சத்யா

அன்புச்செழியன் தலைமறைவு: பெங்களூர் விரைந்தது தனிப்படை

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்ற வகையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியன் கடந்த சில நாட்களாக தலைமறைவாகியுள்ளார்.

சிம்புவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில்