close
Choose your channels

நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய்சேதுபதி

Saturday, December 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது மீண்டும் இந்த ராசியான ஜோடி இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் அந்த முக்கிய கேரக்டர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கேரக்டர் என்றும் இன்று முதல் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்குவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதர்வா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். அஜய்ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமாரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.