ஓடிடிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்?

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் வேறு வழியின்றி ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடியில் ரிலீஸ் ஆகி விட்டன. அவற்றில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றதால் மேலும் சில படங்களும் ஓடிடியைநோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பு இருந்தாலும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றும் 150 திரையரங்குகளுக்கும் குறைவாக ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள் கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பைப் பார்த்த அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் மூன்று மாதங்கள் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்றால் ‘மாஸ்டர், ‘சூரரை போற்று’ உள்பட பல திரைப்படங்கள் ஓடிடியை நோக்கி செல்லும் என்று கூறப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்காவில் நடக்கும் இனவெறிக்கு எதிரான போராட்டம்: ஆதரவு தெரிவித்த ட்ரம்பின் இளைய மகள்!!!

அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் கடந்த மே 25 ஆம் தேதி காவல் துறையினரின் அச்சுறுத்தலால் உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு நீதி

பிரபல ஹீரோவுடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ராவணன்' உள்பட ஒரு சில படங்களிலும் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ்.

கொரோனாவில் இருந்து குணமாகிய குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் எவ்வளவு?

சென்னையில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்