விஜய் 60' படப்பிடிப்பு தொடங்கியது. வேஷ்டி-சட்டையில் அசத்திய விஜய்

  • IndiaGlitz, [Monday,April 11 2016]

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இன்று விஜய்யின் அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது.


இன்று சென்னையில் நடைபெற்ற பூஜையில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குனர் பரதன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். விஜய் வேஷ்டி சட்டையிலும், கீர்த்தி சுரேஷ் சேலையிலும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு 'விஜய் 60' என்று அழைக்கப்படுகிறது.

எங்கள் வீட்டு பிள்ளை, படிக்காதவன், வீரம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் வில்லன்களாக ஜெகபதிபாபு மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இதுதான் இவர் இசையமைக்கும் முதல் விஜய் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுகுமார் ஒளிப்பதிவில், ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பில் கவியரசு வைரமுத்து பாடல் வரிகளில் இந்த படம் உருவாகவுள்ளது. இன்று தொடங்கிய படப்பிடிப்பு இரண்டு நாட்கள் மட்டும் நடைபெறும் என்றும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தேர்தல் முடிந்தபின்னர் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

More News

'விசாரணை'க்கு கிடைத்த மேலும் ஒரு விருது

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் தேசிய விருது உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளை ...

வெங்கட்பிரபுவின் 2வது இன்னிங்ஸ் இன்று ஆரம்பம்

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் சம்பந்தமான திரைப்படமான 'சென்னை 28'...

'24' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்த '24' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சற்று முன் நடந்தது...

முன்பதிவில் 'தெறி' செய்த புதிய சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் மின்னல் வேகத்தில்...

'தல' படத்துடன் இணையும் கலைப்புலி எஸ்.தாணு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தை பிரமாண்டமாக தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தற்போது 'தல' படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...