close
Choose your channels

முன்பதிவில் 'தெறி' செய்த புதிய சாதனை

Monday, April 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் மின்னல் வேகத்தில் ஒருசில நிமிடங்களில் முதல் நாளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்பனையாகி சாதனை செய்துள்ளது.


சென்னை மற்றும் கோவையில் உள்ள எஸ்பிஐ சினிமாஸ் திரையரங்குகளில் முதல் நாளுக்குரிய 124 காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்பனையாகி முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'லிங்கா' படத்திற்கு முதல் நாளில் 104 காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்கள் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் LUXE திரையரங்குகளில் முதல் நாளில் 30 காட்சிகளுக்குரிய ஷங்கரின் 'ஐ' படத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்பனையாகி சாதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 'தெறி' படத்திற்காக அதே திரையரங்குகளில் 33 காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்துவிட்டது. வசூலை பொறுத்தவரையில் இது 'தெறி'யின் ஆரம்பம்தான் என்றும் இன்னும் பல சாதனைகளை 'தெறி' செய்ய காத்திருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.