'தெறி' முன்பதிவு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 08 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த படத்தின் வியாபாரம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆனதில் இருந்தே இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் முன்பதிவு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய இப்பொழுது முதலே தயாராக இருப்பதால் முன்பதிவு தொடங்கிய ஒருசில வினாடிகளில் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட்டுக்கள் விற்பனையாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைப்புலி எஸ்.தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் அட்லியின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் இந்த படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

மணிரத்னம் படத்தை தயாரிப்பது உண்மையா? ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் விளக்கம்

கடந்த ஆண்டு வெளிவந்த 'ஓகே கண்மணி' வெற்றி திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி, சாய்பல்லவி நடிக்கவுள்ளார் ...

ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் தேதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது...

34 வருடங்களுக்கு பின் ரீமேக் ஆகும் படத்தில் அனிருத்

கடந்த 1982ஆம் ஆண்டு நாரதமுனியாக விசு நடித்து இயக்கிய திரைப்படம் 'மணல் கயிறு'. எஸ்.வி.சேகர், மனோரமா...

இசைஞானியை மிஸ் செய்த சிவகார்த்திகேயன்

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள 'ஓயே' திரைப்படம் விரைவில் வெளியாக படக்குழுவினர் தரப்பில் அனைத்து...

ஏ.ஆர்.ரஹ்மானின் '24' டிராக் லிஸ்ட்

சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள '24' படத்தின் பாடல்கள் வரும் 11ஆம் தேதி...