close
Choose your channels

விஜய் டிவியில் மெகா தொடர்.. பரபரப்பான திருப்பங்களுடன் சகோதரிகளின் கதை 

Thursday, November 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகாநதி எனும் விஜய் டி‌வியின் மெகா தொடர் ஜனவரி மாதம் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த கதை 4 சகோதரிகளின் கதையாக தொடங்கி இன்று வரை பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. சந்தானம் எனும் ஒருவர் தன் குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வர, தன் குடும்பம் கொடைக்கானலில் வாழ்ந்து வருகிறார்கள். கங்கா, இவர்களின் முதல் மகள். காவேரி, இவர்களின் இரண்டாவது மகள்.

நிவின், அந்த ஊருக்கு தீபாவளிக்காக வருகைதர, காவேரியை பார்த்தவுடன் காதலில் விழுகிறான். சந்தானம், தன் உயிர் தோழன் பசுபதியை சந்தித்து பேங்கில் போடசொல்லி கொடுத்திருந்த பணத்தை வித்ட்ரா செய்து தருமாறு கேட்க, பசுபதி அந்த பணம் முழுவதும் நிலம் ரிஜிஸ்டர் செய்யவே சரியாக இருந்தது, வேறு பணம் பேங்கில் இல்லை என்று சொல்ல, சந்தானம் அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்த நாள் காலை , கங்கா நிச்சயதன்று அவர் எழவில்லை, தூக்கத்திலேயே மரணமடைகிறார். குடும்பம் சிதைந்து போக, குமரன் வீட்டின் ஆண் ஆகிறான். அப்பாவின் மரணத்தால் நின்று போன நிச்சயத்தை பற்றி ஊரே பேச, வேறு வழி இல்லாமல், கங்கா குமாரனை திருமணம் செய்து கொள்கிறாள்.

துபாயில் இருந்து சந்தானத்தின் நண்பர்கள் வர, சந்தானத்தின் உடைமைகளை தர, அதில் ஒரு டைரியில் கணக்கு வழக்குகளை எழுதி இருக்க, இதை காவேரி பார்க்கிறாள். அதில் பசுபதியிடம் கொடுத்த பண விவரங்கள் முழுவதும் இருக்க, சந்தானம் வாங்க நினைத்திருந்த ஒரு நிலத்தை பசுபதி தன் பெயரில் ரிஜிஸ்டர் செய்து வாங்கி கொள்ள, இதை காவேரி ஆராய்ந்து கண்டுபிடிக்க, இது தெரிந்த பசுபதி, நிவின் காவேரியை காதலிக்கிறான் என்று புரிந்துகொள்ள, தன் மகள் ராகினிக்கும் நிவினுக்கும் நிச்சயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறான்.


நிவின் காவேரியிடம் தன் காதலை சொல்ல, காவேரியும் அதை ஏற்று கொள்கிறாள். காவேரியும், நிவினும் சேர்ந்து பசுபதியின் துரோகத்தை சுட்டிக்காட்ட, அவர்கள் தோல்வி அடைகிறார்கள். திடீர்யென நர்மதாவின் (கடைசி மகள்) உடல்நிலையில் பிரச்சனை வர, டாக்டர் அவளின் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, குடும்பமே உறைந்து போகிறது.

நிவின் ராகினி திருமணதன்று பசுபதி செய்த குற்றதை அனைவர் முன்னிலையிலும் கூறி, பசுபதி தன் அப்பாவை ஏமாற்றி, திருடிய பணத்தை வாங்கி கொண்டு கொடைக்கானலில் இருந்து குடும்பத்துடன் நர்மதாவின் சிகிச்சைக்காக சென்னை கிளம்புகிறார் காவேரி.

சென்னையில் ஒரு வீட்டில் தங்கிருக்க, பசுபதி காவேரி தன்னை அசிங்கபடுத்திவிட்டாள் என்ற கோபத்தில் காவேரியின் குடும்பத்திற்கு பிரச்சனைகள் தருகிறார். தன் வீட்டில் யார் பிரச்சனை செய்கிறார் என்ற கோபத்தில் பசுபதியிடம் சண்டையிட வருவது விஜய், வீட்டின் ஓனர்.

காவேரி குடும்பம் இவனை பார்த்து அதிர்ந்து போகிறார்கள். பசுபதியிடம் வாங்கி வந்த பணத்தை குமரனின் அக்கவுண்டில் போட, அந்த பணம் தொலைந்து போகிறது. நர்மதாவின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருக்க, காவேரி விஜயிடம் ஒரு காண்ட்ராக்ட் திருமணதிற்கு ஒப்புக் கொள்கிறார். காவேரி நர்மதாவின் சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்த கையோடு, விஜய்யை கல்யாணம் செய்து கொண்டு வீட்டிற்கு வர, வீட்டில் அனைவரும் எதிர்பாராத விதமாக இருப்பதால் அதிர்ந்து போகிறார்கள்.

காவேரிக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட நிவின், மனமுடைகிறான். தான் ராகினியை திருமணம் செய்யவில்லை என்று சொல்ல, காவேரிக்கு அது பெரும் வலியாக இருக்கிறது. விஜய்யின் குடும்பம் விஜய் காவேரிக்கும் திருமண வரவேற்பு நடத்த சாரதா வர மறுக்கிறார்.

திருமண வரவேற்பு நடைபெற, அங்கே நிவின் வருகிறான். நிவினின் வருகையால் குழப்பங்கள் ஏற்படுமா? காவேரியின் குடும்பம் அவளுக்காக வருகை தருவார்களா?காணுங்கள் பரபரப்பான திருப்பங்களுடன், மகாநதி. திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7 மணிக்கு, உங்கள் விஜய் டிவியில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.