மாலத்தீவில் செம கிளாமரில் கலக்கும் விஜய் டிவி பிரியங்கா: முத்த வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கு கிளாமர் உடையில் கலக்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதில் அவர் இரண்டாவது இடம் பெற்றார் என்பதும் தெரிந்ததே. பிரியங்காவுக்கு ஒரு மிகப்பெரிய ரசிக கூட்டமே உள்ளது என்றும் அவரது நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மாகாபா மற்றும் அவருடைய மனைவியுடன் பிரியங்கா மாலத்தீவு சென்றுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார். அப்போது அவர் அதில் கிளாமர் உடை அணிந்து கலக்கி இருக்கும் நிலையில் ’இந்த மாதிரி உடையை ஏன் நீங்கள் நம்மூரில் அணிய மாட்டேங்கிறேங்க’ என்று கேட்டதற்கு ’ரோம் நகரில் ரோம் பெண்ணாக இருக்க வேண்டும், மாலத்தீவில் மாலத்தீவு பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் மாலத்தீவுக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரின் கையில் பிரியங்கா முத்தம் கொடுத்த காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராதையின் கண்ணனாக மாறி ரொமான்ஸ் செய்யும் மஞ்சுவாரியர்.. செம புகைப்படங்கள்..!

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கண்ணனாக மாறி ராதையுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

தரமான கல்வி வேணும்ன்னா காசு கொடுக்கணும்: 'வாத்தி' டிரைலர்

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் வரும் 18 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

குடித்துவிட்டு ரகளை செய்தாரா ஓட்டேரி சிவா? கண்ணீருடன் அளித்த விளக்கம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய கோமாளி ஓட்டேரி சிவா முதல் வாரம் மட்டுமே வந்த நிலையில் அடுத்த வாரம் நீக்கப்பட்டார்.

வைரலாகும் அஞ்சனாவின் பீச் புகைப்படங்கள்..!

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனாவின் லேட்டஸ்ட் பீச் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தை இயக்குகிறாரா இந்த இயக்குனர்.. வைரல் டுவிட்..!

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான விஜய் படத்தை இயக்கிய இயக்குனர், 10 வருடங்களுக்குப் பின் மீண்டும் அவருடைய படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்