close
Choose your channels

மாலத்தீவில் செம கிளாமரில் கலக்கும் விஜய் டிவி பிரியங்கா: முத்த வீடியோ வைரல்..!

Thursday, February 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த நிலையில் அங்கு கிளாமர் உடையில் கலக்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அதில் அவர் இரண்டாவது இடம் பெற்றார் என்பதும் தெரிந்ததே. பிரியங்காவுக்கு ஒரு மிகப்பெரிய ரசிக கூட்டமே உள்ளது என்றும் அவரது நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் மாகாபா மற்றும் அவருடைய மனைவியுடன் பிரியங்கா மாலத்தீவு சென்றுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார். அப்போது அவர் அதில் கிளாமர் உடை அணிந்து கலக்கி இருக்கும் நிலையில் ’இந்த மாதிரி உடையை ஏன் நீங்கள் நம்மூரில் அணிய மாட்டேங்கிறேங்க’ என்று கேட்டதற்கு ’ரோம் நகரில் ரோம் பெண்ணாக இருக்க வேண்டும், மாலத்தீவில் மாலத்தீவு பெண்ணாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் மாலத்தீவுக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரின் கையில் பிரியங்கா முத்தம் கொடுத்த காட்சியும் அந்த வீடியோவில் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment