விஜய் டிவி புகழ் வீட்டில் நடந்த விசேஷம்.. ஷிவாங்கி உள்பட குவிந்த பிரபலங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவி புகழ் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ஷிவாங்கி உள்பட பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை உலகினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
’குக் வித் கோமாளி’ உட்பட பல விஜய் டிவியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் புகழ். இவர் பென்சி என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் என்பதும் இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புகழ் மனைவி பென்சிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி உள்பட பல சின்னத்திரை உலக பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு புகழ் மற்றும் பென்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விரைவில் குட்டி புகழை பார்க்க தாங்கள் ஆர்வமாக இருப்பதாகவும் தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் புகழ் மற்றும் பென்சிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments