close
Choose your channels

சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பினேன்.. விபத்தில் சிக்கிய சீரியல் நடிகையின் வீடியோ..!

Friday, August 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி, விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் விபத்தில் சிக்கியதாகவும், சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பியதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’முத்தழகு’ சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ஆனந்த ராகம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை வைஷாலி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருநெல்வேலி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ’தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தான் சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும் தான் சீட் பெல்ட் போட்டிருந்ததால் சிறிய அளவில் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை சீட் பெல்ட் மற்றும் காரில் ஏர்பேக் இல்லாமல் இருந்தால் இந்த விபத்தில் விபரீதம் ஆகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே காரில் செல்லும் போது கவனமாக மெதுவாக செல்லுங்கள், கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் சீக்கிரம் குணமடைந்து விடுவேன் என்றும் தன்னை அக்கறையுடன் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos