close
Choose your channels

புதிய கார் வாங்கிய பூவையார்: குவியும் வாழ்த்துக்கள்

Tuesday, October 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய், சியான் விக்ரம் படங்கள் உள்பட சில படங்களில் நடித்த பூவையார் தற்போது சொந்த கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகி விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும், விஜய் டிவி பிரபலங்கள் பலர் சொந்த வீடு, சொந்த கார் என மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பூவையார். அந்த நிகழ்ச்சிகள் இரண்டாவது ரன்னர் அப் ஆன பூவையார், அதன் பின்னர் ஒருசில திரைப்படங்களில் பாடல்கள் பாடினார். மேலும் விஜய் நடித்த ’பிகில்’ ’மாஸ்டர்’ மற்றும் விக்ரம் நடித்த ’கோப்ரா’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் தற்போது பூவையார் சொந்த கார் வாங்கியுள்ளார். தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்களான ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மைனா நந்தினி, சரத், புகழ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆஜித் உள்பட பலர் கார் வாங்கி செட்டில் ஆன நிலையில் தற்போது பூவையாரும் கார் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment