ஜெ.இருந்தபோது கமல் மட்டும்தான் வாயை மூடிக்கொண்டிருந்தாரா?- விஜயகாந்த் விளாசல்

  • IndiaGlitz, [Monday,July 24 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக கூறி வரும் அரசியல் குறித்த கருத்துக்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் புயலை கிளப்பிய நிலையில் தற்போது தமிழக அரசியல் ரஜினி, கமல் ஆகியோர்களையே சுற்றி வருகிறது.
இந்த நிலையில் ரஜினி, கமல் குறித்த அரசியல் நகர்வுகள் குறித்து இதுவரை விமர்சனம் செய்யாமல் இருந்த விஜயகாந்த் தற்போது முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை கமல்ஹாசன் அமைதியாக இருந்தது ஏன் என்று ஆளும் அதிமுக அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த விஜயகாந்த், 'ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது வாயைப் பொத்திக் கொண்ருந்த கமலஹாசன் இப்போது மட்டும் பேசுவது ஏன் என அமைச்சர்கள் கேள்வி கேட்கிறார்களே, நீங்களும் ஜெயலலிதா இருந்தபோது வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார். கமல்ஹாசனுக்கு ஆதரவாக விஜயகாந்தும் கருத்து தெரிவித்துள்ளதால் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

More News

நான் உன்னைவிட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்: ஓவியாவிடம் காயத்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து வெளிவரும் புரமோ வீடியோ அன்றைய நாள் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி விடுவதாய் உள்ளது.

ஜூலி கேட்ட அந்த 5 வினாடி வீடியோ இதுதான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் பச்சோந்திதனத்தை கமல்ஹாசன் ஒரு குறும்படம் மூலம் அனைவருக்கு தெரியும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டினார்.

ஓவியாகிட்ட இருந்து நான் நிறைய கத்துகிட்டேன்: பிரபல சீனியர் நடிகை

ஓவியா! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் மக்களின் மனங்களை வென்ற ஒரு சூப்பர் ஸ்டார். ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி என சமூக வலைத்தளங்களின் டிரெண்டே ஓவியாதான்.

சூர்யாவிடம் வருத்தம் தெரிவித்த செல்வராகவன்

பிரபல நடிகர் சூர்யா நேற்று தனது 42வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதையும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பதையும் பார்த்தோம்

தமிழக அரசியலில் திரைநட்சத்திரங்கள் பெற்ற வெற்றி தோல்விகள்

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எப்படியோ, தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஐம்பதாண்டு அரசியல் வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் திரையுலகினர்களின் பங்கு மிக அதிகம்.