close
Choose your channels

ஓவியாகிட்ட இருந்து நான் நிறைய கத்துகிட்டேன்: பிரபல சீனியர் நடிகை

Monday, July 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓவியா! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் மக்களின் மனங்களை வென்ற ஒரு சூப்பர் ஸ்டார். ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி என சமூக வலைத்தளங்களின் டிரெண்டே ஓவியாதான். இத்தகைய ஓவியாவை அனைவரும் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில் கமல், ரஜினி போன்ற நடிகர்களுடன் நடித்த சீனியர் நடிகை ஸ்ரீப்ரியா ஓவியாவிடம் இருந்து தான் நிறைய விஷயங்களை கற்று கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஓவியா வயதில் சிறியவராக இருந்தாலும், ஒவ்வொரு விஷயத்தையும் பொறுமையாக ஹேண்டில் செய்வதாகவும், இக்கட்டான நேரத்தில் தன்னால் பிரச்சனை பெரிதாக கூடாது என்பதற்காக அந்த இடத்தை விட்டு விலகும் பக்குவமான குணத்தை அவர் பெற்றிருப்பதாகவும் ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்
மேலும் கோபத்தைக் கட்டுப்படுத்தி கொண்டு யாரைப் பற்றியும் பேசாமல், எதுக்கும் கலங்காமல், எப்பவும் சந்தோஷாமா இருக்கும் நல்ல விஷயங்களால் பலரும் ஓவியாவை விரும்புவதாகவும், தனக்கும் ஓவியாவை இந்த காரணங்களால் பிடித்திருப்பதாகவும் ஸ்ரீபிரியா தெரிவித்தார். குறிப்பாக 'நான் நானா இருக்கணும்' என்ற விஷயத்தை ஓவியாவிடம் இருந்து தான் கற்று கொண்டதாக அவர் மேலும் கூறினார்.
மேலும் காயத்ரி குறித்து ஸ்ரீபிரியா கூறியபோது, 'காயத்ரியின் தந்தை ரகுராமன், தாய் கிரிஜா ஆகிய இருவரையும் தனக்கு நன்றாக தெரியும் என்றும், அவருடைய மகளா இப்படி நடந்து கொள்கிறார் என்று தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறிய ஸ்ரீப்ரியா, 'தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையும் தெரிந்த காயத்ரிக்கு 'சீர்' என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாதது ஆச்சரியமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.