ஆங்கிலம் தெரியாதவர் எதற்கு பாடம் நடத்துகிறார்? விஜயகாந்த் ஆவேசம்

சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழ் மருத்துவர்கள், ஆயுஷ் செயலர் ராஜேஷ் கொடேஜாவிடம் தங்களுக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்றும் இந்தி தெரியாதவர்கள் வகுப்பில் இருந்து வெளியேறலாம் என்று கூறியதாக செய்தி பரவியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்து இதுகுறித்து காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் தெரியாதவர் பாடம் நடத்த தகுதியற்றவர் என்று விஜயகாந்த் கூறிய முழு அறிக்கையின் விபரம் இதோ:

கடந்த 18-ஆம்‌ தேதி முதல்‌ 20-ஆம்‌ தேதி வரை ஆன்லைன்‌ மூலம்‌ யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில்‌, தமிழகத்தை சேர்ந்த 37 பேர்‌ உட்பட நாடு முழுவதும்‌ 350-க்கும்‌ மேற்பட்ட மருத்துவர்கள்‌ கலந்து கொண்டனர்‌. இந்த நிகழ்ச்சியின்‌ போது ஆயுஷ்‌ அமைச்சக செயலாளர்‌ ராஜேஷ்‌ கொடேஜா இந்தியில்‌ பேசியதால்‌, தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள்‌ ஆங்கிலத்தில்‌ உரையாற்றும்படி கோரியுள்ளனர்‌. ஆனால்‌, தனக்கு ஆங்கிலத்தில்‌ சரளமாக பேசத்‌ தெரியாது என்றும்‌ இந்தி தெரியாதவர்கள்‌ பயிற்சியில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளலாம்‌. இந்தி தெரியாதவர்கள்‌ வெளியேறலாம்‌ என கூறிய மத்திய ஆயுஷ்‌ அமைச்சக செயலாளர்‌ ராஜேஷ்‌ கொடேஜாவுக்கு கண்டனம்‌.

இந்தி தெரியாதவர்கள்‌ வெளியேறலாம்‌ என கூறிய செயலாளர்‌, ஆங்கிலம்‌ தெரியாமல்‌ யோகா பயிற்சி நடத்த வந்தது ஏன்‌? ஆங்கிலம்‌ தெரியாதுன்னு சொன்ன ஆயுஷ்‌ அமைச்சக செயலாளர்‌ ராஜேஷ்‌ கொடேஜா பாடம்‌ எடுக்க தகுதியற்றவர்‌. மத்திய அரசு, உடனடியாக அவர்‌ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இதுபோன்ற சம்பவங்கள்‌ இனிமேல்‌ நடைபெறாமல்‌ இருக்க மத்திய அரசிடம்‌ தமிழக முதல்வர்‌ கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்‌.

இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

அமெரிக்கா, இங்கிலாந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை: எஸ்பிபி குறித்த லேட்டஸ்ட் அறிக்கை

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சக பயணிக்கு பிசினஸ் கிளாஸை விட்டு கொடுத்த தல தோனி: வைரலாகும் வீடியோ

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்த தல தோனி அவர்கள் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தவுடன் சமூக வலைதளமே ஸ்தம்பித்தது

ஓடிடியில் 'சூரரை போற்று': தயாரிப்பாளர்கள்-திரையரங்கு உரிமையாளர்கள் மோதல்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய பிரம்மாண்டமான திரைப்படம் 'சூரரைப்போற்று'. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

விமல் நடிக்கும் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான 'பசங்க' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் விமல். அதன் பின்னர் 'களவாணி' 'கலகலப்பு' 'மஞ்சப்பை' உள்ளிட்ட பல

இங்க அடிச்சா மும்பையில அடிவிழும்: 'லாபம்' டிரைலர் விமர்சனம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கிய 'லாபம்' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது