ஒரு நிமிடம் முழுசா பேச முடியல: 6 கட் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை கண்டு கலங்கும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,April 15 2019]

தமிழகத்தில், தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, ஓட்டு கேட்டு வருகின்றனர்.

நிலைப்பாடில்லாத இந்த அரசியல் சூழ்நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று யூகிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த், தேமுதிக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

37 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில், 6 கட் இருக்கிறது.  தேர்தல் நேரங்களில், கம்பீரமாக சிங்கம் போல் நின்று கர்ஜித்து பேசிய விஜயகாந்த் இன்று ஒரு நிமிடம் கூட முழுசாக பேச முடியவில்லையே என ரசிகர்களும், தொண்டர்களும் அவரின் நிலையை பார்த்து கலங்கி உள்ளனர்.

ஏற்கனவே விஜயகாந்த் உடல்நல பிரச்சினைக்காக இரண்டு முறை அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.  அதைத் தொடர்ந்து தற்போது அவருடைய உடல்நிலை சரி ஆகாததால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

துப்பாக்கியை எடுக்கவும் தயாராக இருக்கிறேன்! பாஜக பிரச்சார கூடத்தில் தூள் கிளப்பிய பிரபல நடிகர்!

தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

போதையில் பிணங்களுடன் உடலுறவு கொண்ட 23 வயது இளைஞர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையான 'கசீம் குரம்'  என்கிற 23 வயது இளைஞர், பிணவறையில் உள்ள சடலங்களுடன் உடல் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய காதலன்

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய காதலன் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

போராட்டத்தை உருவாக்குற சூழ்நிலையும் தப்புதானே! 'காப்பான்' டீசர் விமர்சனம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளது

தலைவர், தல ஆட்டம்: கார்த்திக் சுப்புராஜை வறுத்தெடுத்த 'தல' ரசிகர்கள்!

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'பேட்ட' திரைப்படம் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.