இன்னும் 50 நாட்களில் 'விக்ரம்': படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாக இன்னும் சரியாக ஐம்பது நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சமீபத்தில் பெற்றது என்பதும் இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வெளியாக சரியாக 50 நாட்கள் இருக்கும் நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘விக்ரம்’ படத்தின் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மாஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

More News

சிவகார்த்திகேயன் வழக்கு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது: நீதிமன்றத்தில் சொன்னது யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் வழக்கு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என வருமான வரித்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய படம்: 'வாழ்நாள் அற்புதம்' என நடிகர் நெகிழ்ச்சி!

 சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டிய நிலையில் அந்த படத்தின் ஹீரோ தனது வாழ்நாள் அற்புதம் என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

'பீஸ்ட்' படத்தில் இந்தி மொழி வசனம்: அண்ணாமலை, ஜெயகுமார் கருத்து!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

'பீஸ்ட்' விமர்சனம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்து!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று காலை வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில்

அமைச்சரானவுடன் நடிகை ரோஜாவின் அதிரடி அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் நடிகை ரோஜா பதவியேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா