close
Choose your channels

இன்னும் 50 நாட்களில் 'விக்ரம்': படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ!

Wednesday, April 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாக இன்னும் சரியாக ஐம்பது நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சமீபத்தில் பெற்றது என்பதும் இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் வெளியாக சரியாக 50 நாட்கள் இருக்கும் நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘விக்ரம்’ படத்தின் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மாஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், அர்ஜூன் தாஸ், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிலோமினாராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment