close
Choose your channels

நடிகர் விக்ரமுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

Friday, July 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் விக்ரம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு எனவும், இதனை அடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் விக்ரமுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் பி.ஆர்.ஆ யுவராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே விக்ரம் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ’பொன்னிய்ன் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. மேலும் அவருடைய அடுத்த படத்தை பா ரஞ்சித் இயக்கவுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.