நடிகர் ஆனந்த்ராஜை அலறவிட்ட 'கோப்ரா' டீம்!

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த படம் விக்ரமின் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் படக்குழுவினர் நடிகர் ஆனந்தராஜை அலறவிட்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. ‘கோப்ரா’ படக்குழுவினர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தப் படத்தின் டப்பிங் போது நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து பகிர்ந்துகொண்டனர்.

குறிப்பாக இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஆனந்தராஜ் டப்பிங் செய்ய வந்தபோது ’எந்த படத்திற்கும் நான் ஒன்று அல்லது இரண்டு நாளில் டப்பிங் பேசி முடித்து விடுவேன் என்று கூறி வந்ததாகவும் ஆனால் அவரை 12 நாட்களுக்கு மேல் டப்பிங் செய்ய வைத்து விட்டோம் என்றும் அஜய் ஞானமுத்து கூறினார்.

அது மட்டுமின்றி விக்ரமுடன் இணைந்து அவர் மீண்டும் டப்பிங் செய்ய வேண்டும் என்று கூறியபோது அலறிவிட்டார் என்றும் இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் இதுபோன்று நான் எந்த படத்திற்கும் டப்பிங் செய்யவில்லை என்றும் அவர் காமெடியாக கூறியதாகவும் விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து கூறியுள்ளனர். மொத்தத்தில் இந்த படத்தில் டப்பிங்கின் போது நடிகர் ஆனந்தராஜை படக்குழுவினர் அலற வைத்துவிட்டனர் இந்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
 

More News

ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன்? நயன் - விக்கியின் வேற லெவல் பிளான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் திருமணச் செலவு முழுவதையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும்

மகனுடன் 'கோப்ரா' படம் பார்த்த விக்ரம்: ரசிகர்கள் உற்சாகம்!

விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. சென்னை உள்பட பல முக்கிய

தளபதி விஜய் 'அதை' ஒருபோதும் பண்ணமாட்டார்: விக்ரம் தெரிவித்த ஆச்சரிய தகவல்

விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த மாஸ் அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

விஜய்யின் 'வாரிசு' படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று