close
Choose your channels

சூப்பர் ஸ்டார் நடிகருடன் இணைகிறார் 'விக்ரம்' பிரபலம் ஏஜண்ட் டீனா!

Monday, September 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் நடித்த கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மட்டுமின்றி சின்ன சின்ன கேரக்டரில் நடித்த நடிகர் நடிகைகள் கூட பெரும் பிரபலம் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ’விக்ரம்’ படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றிய ஏஜண்ட் டீனா என்ற கேரக்டரில் நடித்த வசந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வசந்திக்கு தமிழ் மலையாளம் உள்பட ஒரு சில மொழிகளில் படங்கள் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்த வகையில் ’விக்ரம்’ படத்தை அடுத்து தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த திரைப்படமான ’கிறிஸ்டோபர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வசந்தி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மம்முட்டியுடன் மூன்று நாயகிகள் நடித்து வரும் நிலையில் வசந்தி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ’கிறிஸ்டோபர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.