போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும்: 'கோப்ரா' இயக்குனர் அதிருப்தி

  • IndiaGlitz, [Thursday,March 12 2020]

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கோப்ரா' படக்குழுவினர் ரஷ்யாவில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்த நிலையில் ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால், இந்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று படப்பிடிப்பை பாதியுடன் நிறுத்திவிட்டு நாடு திரும்புகின்றனர். இதனை இயக்குனர் அஜய்ஞானமுத்து தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்ததுடன் ‘போங்கய்யா நீங்களும் உங்கல் கொரோனாவும்’ என்று அதிருப்தியுடன் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

இன்று உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸினை உலகமுழுக்க பரவியுள்ள பெருந்தொற்று நோயாக(pandemic) அறிவித்துள்ளது.

கொஞ்சம் இதையும் கவனிங்க... பிரதமருக்கு ராகுல் காந்தி கூறியிருக்கும் அறிவுரை!!!

முன்னதாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு பா.ஜ.க வே காரண

தனிக்கட்சியெல்லாம் வேண்டாம்.. ரஜினி பாஜக-வில் சேர வேண்டும்..! பொன்.ராதாகிருஷ்ணன்.

ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பமாக இருக்கிறது. ஆனால் இந்த தருணத்தில் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்வது சரியாக இருக்காது

பயங்கரவாதத்தின் மத்தியில் மலர்ந்த ஜனநாயகக் குரல் பெனாசிர் பூட்டோ!!!

“ஒருநாள் கண்டிப்பாக சுட்டுக் கொல்லப் படுவோம்“ எனத் தெரிந்தே அரசியலில் பங்கேற்று, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இ

கொரோனா update.. இந்தியாவில் இன்று வரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா..?!

முதலில் 5 பேருக்கு மட்டுமே கோரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. அடுத்த நாளே அந்த எண்ணிக்கை 29 ஆனது. அதன்பிறகு 40.. இன்று 73ல் வந்து நிற்கிறது.