விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படம் குறித்த சூப்பர் அப்டேட்!

சியான் விக்ரம் நடித்துவரும் 60வது திரைப்படமான ’சியான் 60’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்றது என்பதும் இந்த படப்பிடிப்பில் விக்ரம், துருவ் விக்ரம் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சியான் 60’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நடிகர் விக்ரம் அங்கிருந்து அப்படியே கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு அவர் நடித்துக்கொண்டிருக்கும் இன்னொரு படமான ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘கோப்ரா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி விட்டதாக அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் படக்குழுவினர்களுடன் கொல்கத்தாவில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் நடைபெறும் படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஈரோடு மகேஷூக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

விஜய் டிவியின் பிரபலங்களின் ஒருவர் ஈரோடு மகேஷ் என்பதும் குறிப்பாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான இவர் அடிக்கும் கவுண்ட்டர்கள் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிக்கும்

ஏராளமான வித்தியாசங்கள்: ஸ்டாலின் ஆட்சியின் முதல் பட்ஜெட் குறித்து கமல்ஹாசன்!

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

நடிகர் வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் குறித்து விளக்கம் அளித்த பிரபல தயாரிப்பாளர்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு நடிகர் வடிவேலுவின் காமெடி, மொழியைத் தாண்டி ரசிக்கப்பட்டு வருகிறது.

தல அஜித் படம் படைத்த சாதனை.....! இமான் பதிவிட்டுள்ள ட்வீட்....!

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்பட பாடல்  புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது

தமிழக நிதிநிலை அறிக்கை.....! பெட்ரோல் மீதான வரி குறைப்பு...!

பெட்ரோல் மீதான வரி ரூ.3 ரூபாய் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பழனĬ