close
Choose your channels

விக்ரம், துருவ் விக்ரமின் 'மஹான்' அட்டகாசமான டிரைலர்!

Thursday, February 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடித்த ‘மஹான்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் இந்த டிரைலர் ரிலீஸ் ஆகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் விக்ரம், துருவ் விக்ரம் ஆகியோர்களின் மாஸ் காட்சிகள் மற்றும் சிம்ரன், பாபிசிம்ஹா தோன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் விக்ரம் தனது வித்தியாசமான கெட்டப் மாற்றும் நடிப்பில் அசத்தி உள்ளது இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. அதே போல் துருவ் விக்ரமை ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்த படத்தில் பார்க்க முடிகிறது.

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் அமேசான் ஓடிடியில் வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ளதும், இந்த படத்தின் எதிர்பார்ப்பை இந்த டிரைலர் அதிகரித்துள்ள நிலையில் நிச்சயம் இந்த படம் விக்ரம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், துருவ் விக்ரம், பாபிசிம்ஹா, சிம்ரன், சனத், முத்துகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos