சீயான் விக்ரமின் இருமுகன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Friday,August 12 2016]

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் டிரைலரும், பாடல்கள் மாபெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த படம் வரும் விநாயகர் சதூர்த்தி விடுமுறை வாரமான செப்டம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் முன்பே அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஷிபுதமீன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் விரைவில்!!

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே தயாராகி விரைவில் திரைக்கு...

70 வருடம் - 7 நிமிடம். சாந்தனு பாக்யராஜின் புதிய முயற்சி

இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான கே.பாக்யராஜின் ஒரே மகன் சாந்தனு பாக்யராஜ், கோலிவுட்டில் ஒருசில படங்களில் நடித்திருந்தபோதிலும்...

'கவலை வேண்டாம்' படக்குழுவுக்கு இனி கவலை இல்லை

ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து இந்த படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி...

கபாலி' பாணியில் கலக்க வருகிறது 'இருமுகன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11...

'தல 57' இயக்குனர் சிவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபல இயக்குனர் சிவா தமிழில் இயக்கியது மூன்றே மூன்று படங்கள்தான். அவற்றில் இரண்டு படங்கள் அஜித் நடித்த வீரம் மற்றும் 'வேதாளம்'. மேலும் அஜித்துடன் இணைந்து தற்போது மூன்றாவது படத்தையும் இயக்கி வருகிறார்...