close
Choose your channels

சீயான் விக்ரமின் இருமுகன் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

Friday, August 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'இருமுகன்' திரைப்படத்தின் டிரைலரும், பாடல்கள் மாபெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன்ஸ் அறிவித்துள்ளார்.
இந்த படம் வரும் விநாயகர் சதூர்த்தி விடுமுறை வாரமான செப்டம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் முன்பே அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஷிபுதமீன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.