விக்ரமை மீண்டும் பாட வைப்பாரா தேவிஸ்ரீ பிரசாத்

  • IndiaGlitz, [Friday,May 25 2018]

சீயான் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி டப்பிங் கலைஞர் மற்றும் பாடகர் என்பது பலர் அறிந்ததே. குறிப்பாக 'கந்தசாமி' படத்தில் அவர் பாடிய நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஜெமினி, மதராசபட்டனம், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, ஸ்கெட்ச் உள்பட ஒருசில படங்களில் விக்ரம் பாடியுளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சாமி 2' படத்திலும் விக்ரமை பாட வைக்க இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் முயற்சிப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

''விக்ரம் ஒரு நல்ல பாடகர், அவரது குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். 'கந்தசாமி' படத்தில் அவரை பாட வைத்தபோது அவருக்குள் இருந்த திறமையான பாடகரை அறிந்தேன். ஆனால் 'சாமி 2' படத்தில் விக்ரம் பாடல் பாடுவாரா? என்பதை இயக்குனர் ஹரி தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அனுமதி அளித்தால் மீண்டும் விக்ரமை பாட வைப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ஹரி மெலடி பாடலை விரும்புபவர். அவர் விரும்பும் இசையை 'சாமி 2' படத்தில் அளிப்பேன்' என்று கூறியுள்ளார்.

விக்ரம், கீர்த்திசுரேஷ், பிரபு, பாபிசிம்ஹா, சூரி, ஜான்விஜய் உள்பட பலர் நடித்து வரும் 'சாமி 2' திரைப்படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

More News

ரஜினியுடன் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தால் தனுஷுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத  இழப்பு

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கும் மேல் அந்த பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.

ஜல்லிகட்டு போன்றே இதையும் சாதித்து காட்டுவோம்: விஜய்சேதுபதி

தமிழகத்தில் நடந்த பல போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே போராட்டம் உலக அளவில் கவனத்தை பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என்றால் அது மிகையாகாது.

பெங்களூர் வரை பரவியது ஸ்டெர்லைட் போராட்டம்

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் கடந்த பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை இருந்தாலும் தமிழகத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு பெங்களூர் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளது