close
Choose your channels

விக்ரம் நடித்த அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்.. விக்ரமுக்கு தெரியாமல் வெளியானதா?

Monday, September 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் விக்ரமுக்கு தெரியாமல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் ஆர்எஸ் விமல் என்பவர் இயக்கத்தில் ’மகாவீர் கர்ணா’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் இந்த படம் ட்ராப் எனக்கு கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 32 மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த படத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என இயக்குனர் விமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் இயக்குனர் விமல் தனது இன்ஸ்டா பக்கத்தில் ’மகாவீர் கர்ணா’ படத்தின் டீசரை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார். கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருக்கும் இந்த டீசரில் உள்ள காட்சிகள் அசத்தலாக உள்ளதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். விக்ரம் இடம் தகவல் சொல்லாமலே இந்த டீசர் வெளியானதாகவும் கூறப்படுகிறது

ஆர்எஸ் விமல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மீண்டும் தொடங்கப்படுமா? ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment