ஜெயம் ரவியை அடுத்து ரோமியோ ஆகும் விக்ரம் பிரபு?

  • IndiaGlitz, [Thursday,July 16 2015]

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் ஹன்சிகாவின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து ஐந்தாவது வாரமாக 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நந்தகோபால், தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம்பிரபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அருள்நிதி, பூர்ணா நடித்த 'தகராறு' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் நந்தகோபாலின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஜெயம் ரவியை அடுத்து விக்ரம் பிரபு ரோமியோ ஆக மாறவிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

ஷாருக்கான், அமீர்க்கான் பட சாதனையை முறியடித்தது பாகுபலி

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையை பெற்ற 'பாகுபலி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிநடை...

கார்த்திக் சுப்புராஜ் பாராட்டிய '54321'த்ரில்லர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கும் முதல் படம் 54321. இந்த படத்தின் டைட்டிலே வித்தியாசமாக...

'பாட்ஷா' 2-ஆம் பாகத்தால் பாதிக்கப்பட்டாரா ஜி.வி.பிரகாஷ்?

இளையதலைமுறை இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது விஜய் நடிக்கும் விஜய் 59...

மிஷ்கின் படத்தில் நடிக்க மறுத்த 6 நடிகைகள்

பிசாசு' பட இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பில் ராம்' நடிக்கவுள்ள திரைப்படம் 'சவரக்கத்தி' என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

அஜீத் போட்டோஷூட்டிற்கு கைமேல் பலன் பெற்ற அப்புக்குட்டி

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் அறிமுகமான அப்புக்குட்டி அதன்பின்னர் 'அழகர்சாமியின் குதிரை, குள்ளநரிக்கூட்டம், மன்னாரு, மரியான், வீரம் போன்ற பல படங்களில் நடித்தார்......