close
Choose your channels

ஜெயம் ரவியை அடுத்து ரோமியோ ஆகும் விக்ரம் பிரபு?

Thursday, July 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் மூலம் ஹன்சிகாவின் நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து ஐந்தாவது வாரமாக 'ரோமியோ ஜூலியட்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நந்தகோபால், தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் விக்ரம்பிரபு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அருள்நிதி, பூர்ணா நடித்த 'தகராறு' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய படத்தில் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் நந்தகோபாலின் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. ஜெயம் ரவியை அடுத்து விக்ரம் பிரபு ரோமியோ ஆக மாறவிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.