'விக்ரம் வேதா' படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்சார் அதிகாரிகள்

  • IndiaGlitz, [Friday,June 30 2017]

முதன்முதலாக மாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

'விக்ரம் வேதா' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். நாளை முதல் ஜிஎஸ்டி வரிமுறை நடைமுறை ஆவதால் தமிழக அரசின் வரிவிலக்கு இனி கிடைக்காது என்றாலும் 'ஏ' சான்றிதழால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படம் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் வசூல் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மறுதணிக்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் ஜூலை 7ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது மறுதணிக்கைக்கு செல்வதால் அதற்குள் மறுதணிக்கை பணிகள் முடிந்துவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாதவன், விஜய்சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். சாம் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

தமிழ் சமூகத்தை சீரழிக்கிறார் ஜூலியானா! சீறும் இந்து மக்கள் கட்சி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்ய போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது...

தமிழ் சமூகத்தை சீரழிக்கிறார் ஜூலியானா! சீறும் இந்து மக்கள் கட்சி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் சீரியல் போல காமெடியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம் செய்ய போவதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

சொத்துக்காக மகளையே வீட்டுச்சிறை வைத்த தாய்! கல்வி வள்ளல் குடும்பத்தில் புது சிக்கல்

பிரபல கல்வி வள்ளலும், சத்யபாமா பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஜேப்பியார் அவர்கள் கடந்த ஆண்டு காலமானார் என்பது தெரிந்ததே.

'நாகேஷ் திரையரங்கம்' படத்திற்கு தடை கேட்டு ஆனந்தபாபு வழக்கு

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு, 'நாகேஷ் திரையரங்கம்' படத்தின் டைட்டிலுக்கு தன்னிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும் அதனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்...

ஜூலியை காதலிக்கின்றாரா ஸ்ரீ? ஃபேஸ்புக் பதிவால் பரபரப்பு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டு வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார்...