விஜய் விஷயத்தில் சிம்புவை பின்பற்றிய விக்ராந்த்

  • IndiaGlitz, [Friday,August 28 2015]

மூன்று வருடங்கள் கழித்து கடுமையான பல சோதனைகளை சந்தித்து சிம்புவின் 'வாலு' படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது. இந்த படம் வெளிவர இளையதளபதி விஜய் தானாகவே முன்வந்து சிம்புவுக்கு உதவி செய்தார். விஜய் தலையிட்டதால்தான் இந்த படம் வெளிவந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'வாலு' படத்தின் தொடக்கத்தில் 'இளையதளபதிக்கு நன்றி' என்ற டைட்டில் கார்டு போட்டு விஜய்யை 'வாலு' படக்குழுவினர் கெளரவித்திருந்தனர்.

இந்நிலையில் விக்ராந்த் நடித்த 'தாக்க தாக்க' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தனது மனைவியுடன் சமீபத்தில் பார்த்த இளையதளபதி விஜய், 'படத்தின் முதல் பாதி அற்புதமாக இருப்பதாகவும், இரண்டாவது பாதியின் 40 நிமிடங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த கருத்து படத்திற்கு பெரிய விளம்பரமாக கருதப்பட்டது.

இந்நிலையில் இன்று ரிலீஸாகியுள்ள 'தாக்க தாக்க' திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் இளையதளபதி விஜய் மற்றும் சங்கீதா விஜய் ஆகியோர்களுக்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் தொடங்கியுள்ளது. சிம்புவை பின்பற்றி விக்ராந்த் படக்குழுவினர்களும் இளையதளபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வித்யா பாலன் இடத்தை பிடித்தாரா லட்சுமி மேனன்?

'விஐபி 2' படத்தை அடுத்து தனுஷ் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்....

'10 எண்றதுக்குள்ள' ராஜஸ்தான் படப்பிடிப்பு முடிந்தது

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் நடைபெற்று வந்த நிலையில்....

தனி ஒருவன் - தாக்க தாக்க. ஒரு அபூர்வ ஒற்றுமை

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'தனி ஒருவன்' மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தாக்க தாக்க' ஆகிய இரண்டு படங்களும் இன்று வெளியாகிறது...

பிறந்த நாளில் குடும்பத்துடன் அஜீத்தை சந்தித்த சூரி

கோலிவுட் காமெடி நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான இடத்தை பெற்றுள்ள நடிகர் சூரி நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்....

சூர்யா பட உரிமையை பெற்ற தனுஷ் பட விநியோகிஸ்தர்

சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வந்த 'ஹைக்கூ' படத்தின் டைட்டில் விரைவில் மாற்றப்படவுள்ளது குறித்து சமீபத்தில் பார்த்தோம்....