close
Choose your channels

தனி ஒருவன் - தாக்க தாக்க. ஒரு அபூர்வ ஒற்றுமை

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'தனி ஒருவன்' மற்றும் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'தாக்க தாக்க' ஆகிய இரண்டு படங்களும் இன்று வெளியாகிறது. இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதும் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தபோதிலும், இந்த இரு படங்களுக்கும் இடையே ஒரு அபூர்வ ஒற்றுமை உள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

'தனி ஒருவன்' மற்றும் 'தாக்க தாக்க' ஆகிய இரு படங்களிலும் ஹீரோவின் உடன்பிறந்த சகோதரர்தான் இயக்குனர் என்பதுதான் அந்த அபூர்வ ஒற்றுமை. தனி ஒருவன் படத்தை ஹீரோ ஜெயம் ரவியின் சகோதரர் ஜெயம் ராஜாவும், 'தாக்க தாக்க' படத்தை விக்ராந்தின் சகோதரர் சஞ்சீவ்வும் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளிவந்தபோதிலும் இரு படங்களுக்கும் இடையே போட்டி இருக்காது என கூறப்படுகிறது. திரையுலகில் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் நிலையில் இருவரது படங்களும் வெற்றி அடைய நமது வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.