மகாபலிபுரம் ரிசார்ட்.. கையில் சரக்கு.. கால் கொலுசில் கவிதை.. 42 வயது நடிகையுடன் 'டாக்டர்' பட நடிகர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில ஆண்டுகளாக டாக்டர் பட நடிகர், 42 வயது நடிகையை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் அவர்களது போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து அடுத்த லெவலுக்கு இவர்களது உறவு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரை உலகில் ’உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் வினய், அதன் பிறகு ’ஜெயம் கொண்டான்’ ’மோதி விளையாடு’ ’மிரட்டல்’ ’என்றென்றும் புன்னகை’ உள்பட பல படங்களில் நடித்தார். மேலும் ’அரண்மனை’ ’துப்பறிவாளன்’ ’ஆயிரத்தில் இருவர்’ உட்பட பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வினய், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தார் என்பதும் அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் வினய் கடந்த சில வருடங்களாக 42 வயது நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் அவ்வப்போது வெளிநாட்டு பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது என்பது தெரிந்தது. இந்த நிலையில் விமலா ராமன் சமீபத்தில் வினய்யுடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
மகாபலிபுரம் ரிசார்ட்டில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருவரும் கையில் சரக்குடன் உள்ள காட்சி, விமலா ராமனின் காலையில் வருடி கவிதை சொல்லும் வினய்யின் காட்சி, விமலா ராமனின் மடியில் வினய் படுத்து இருக்கும் காட்சிகள் உட்பட பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருக்கும் வினய் மற்றும் விமலா ராமன் அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments