ஹரியின் 'ரத்னம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து தப்பித்த விஷால்..!

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, திருப்பதி என பல இடங்களில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து விஷால் தப்பித்து இரண்டு வாரம் கழித்து தனது ’ரத்னம்’ படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறிங்க.. இதையும் வைரல் ஆக்குங்கள்: பிக்பாஸ் ரக்சிதா வேண்டுகோள்..!

 கண்டதை எல்லாம் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் இதையும் வைரல் ஆக்குங்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரக்சிதா மகாலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில்

'உளறி கொட்டும் மலேசிய மாமா.. முத்து சந்தேகம்.. சிறகடிக்க ஆசையில் அடுத்தடுத்து திருப்பங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் ஏராளமானோர் மனதை கவர்ந்து விட்டது

கமல்-எச்.வினோத் படம் டிராப்.. மறைமுகமாக அறிவித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் காலதாமதம் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது கிட்டத்தட்ட அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.  

அரசியலில் நுழைகிறார் ஜானி மாஸ்டர்! பிரபல நடிகரின் கட்சியில் இணைந்ததால் பரபரப்பு..!

 தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டில் உள்ள சில படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வரும் ஜானி மாஸ்டர் திடீரென பிரபல நடிகர் ஒருவரின் அரசியல் கட்சியில் இணைந்துள்ளதாக

கட்சியின் பெயரை மாற்றிய தமிழ் வில்லன் நடிகர்.. புதிய பெயர் என்ன?

தமிழ் திரை உலகின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் புதிய அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது அவர் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.