close
Choose your channels

ஹரியின் 'ரத்னம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து தப்பித்த விஷால்..!

Thursday, January 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ஹரி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, திருப்பதி என பல இடங்களில் நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’ரத்னம்’ திரைப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழ் புத்தாண்டு கும்பலில் இருந்து விஷால் தப்பித்து இரண்டு வாரம் கழித்து தனது ’ரத்னம்’ படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos