'மார்க் ஆண்டனி விபத்து குறித்து விஷால், எஸ்ஜே சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,February 22 2023]

’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நடந்த நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதலை பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து எஸ்ஜே சூர்யா கூறியபோது, ‘உண்மையில் கடவுளுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நூலிழையில் உயிர் தப்பினோம். திட்டமிட்டபடி அந்த லாரி நேராக வரவேண்டும், ஆனால் திசை மாறியதால் நாங்கள் உயிர் பிழைத்தோம், அவ்வாறு இல்லை என்றால் இந்நேரம் எங்களால் டுவிட் செய்திருக்க முடியாது, கடவுள் அருளால் தப்பினோம்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்

மேலும் ’ஒரு சில நொடிகள் மற்றும் ஒரு சில இன்ச் வித்தியாசத்தில் நாங்கள் தப்பித்தோம், கடவுளுக்கு நன்றி என்றும் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து இருந்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், டிஎஸ்ஜி, ரிதுவர்மா, உள்பட பலர் நடித்துளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

More News

ஜெயம் ரவியின் 'அகிலன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்படும் வகையில் அதிகாரபூர்வமாக

அபிராமி வெங்கடாசலத்தின் பாம்பு டாட்டூ .. எந்த இடத்தில் குத்தியிருக்கிறார் தெரியுமா?

நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சமீபத்தில் முதுகில் நடராஜர் டாட்டூ குத்திருந்த புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கண்டனங்களும் ஒரு சில ஆதரவுகளும்

இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பா? மண்ணும் பெண்ணும் ஒன்றா? ஐட்டம் சாங் எதற்கு? காரசாரமான கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்..!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலமையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

அஜித் படத்தை இழந்த விக்னேஷ் சிவனுக்கு கை கொடுத்த டாப் 3 ஹீரோக்கள்..!

அஜித் நடிக்க இருந்த 'ஏகே 62' திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் இதனை அடுத்து 'ஏகே 62'

'வினோதய சித்தம்' தெலுங்கு ரீமேக்கில் மாஸ் நடிகர்.. சமுத்திரக்கனி கேரக்டரில் இவரா?

சமுத்திரகனி இயக்கி நடித்த 'வினோதயா சித்தம்' என்ற திரைப்படம் கடந்த 2021ஆம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.