close
Choose your channels

ஜெயம் ரவியின் 'அகிலன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Wednesday, February 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ என்ற திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்படும் வகையில் அதிகாரபூர்வமாக இந்த படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் ’பூலோகம்’ திரைப்படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’ . ஜெயம் ரவி ஜோடியாக பிரியா பவானிசாகர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பட நடித்துள்ளனர் என்றும் கடல் கொள்ளையராக ஜெயம் ரவி இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் சற்று முன் இந்த படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் விவேக் ஆனந்த சந்தோசம் ஒளிப்பதிவில் கணேஷ் குமார் படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜெயம் ரவியின் அடுத்த வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.