'வலியை தாங்கிகிட்டவன் தான் ஜெயிக்க முடியும்: 'எனிமி' டிரைலர்

  • IndiaGlitz, [Saturday,October 23 2021]

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனிமி’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரையும் அவரது பெற்றோர்களான தம்பி ராமையா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் போட்டியாளர்களாகவே வளர்த்து வருகின்றனர். ஆரம்பம் முதலே இருவரும் போட்டியாளர்களாக வளர்ந்து வரும் நிலையில், வளர்ந்த பின்னரும் ‘எனிமி’யாக மாறியது ஏன் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் இந்த படத்தின் பிளஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன், மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அவதூறு வழக்கு தொடர்ந்த சமந்தாவுக்கு நீதிபதி கூறிய அறிவுரை!

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்ததையடுத்து அவரது விவாகரத்து குறித்து ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் பல்வேறு வதந்திகள் வெளிவந்தன

பிரியங்காவுக்கு கமல்ஹாசன் கேள்வி: நெட்டிசன்களின் குறும்படம் வேலை செய்யுது போல!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அக்ஷரா கேமரா முன் எழுதி காண்பித்துவிட்டு அதை டிஸ்போஸ் செய்துவிடுவதாக பிரியங்கா குற்றம்சாட்டினார் என்பதையும் அதே போல் பிரியங்காவும் நிரூப் கையில்

அபிஷேக்கை அலறவிட்ட கமல், தப்பித்த 4 போட்டியாளர்கள்: இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் கமலஹாசன் ரூல்ஸை மீறிய போட்டியாளர்களிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க உள்ளார் என்று கூறியதை அடுத்து இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும்

விஜய்சேதுபதி, சீனுராமசாமி இல்லாமல் 'தர்மதுரை 2' படமா? தயாரிப்பாளர் விளக்கம்!

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தர்மதுரை'. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது

உலகின் மிக உயரமான மலையில் தேசியக்கொடியுடன் ஏறிய தமிழ் நடிகை!

உலகின் மிக உயரமான மலை என்று கூறப்படும் கிளிமஞ்சாரோ மலையில் ஏறி தமிழ் நடிகை ஒருவர் சாதனை செய்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.