close
Choose your channels

நயன்தாராவுடன் நடிப்பது உண்மையா? விஷால் விளக்கம்

Friday, January 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்துவிட்டு நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் 'அறம்', 'இமைக்கா நொடிகள்', ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்

இந்நிலையில் விஷாலுடன் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. கடந்த 2008ஆம் ஆண்டு 'சத்யம்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த நிலையில் 8 வருடங்களுக்கு பின்னர் தற்போது மீண்டும் விஷாலுடன் நயன்தாரா இணைவதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை விஷால் மறுத்துள்ளார். தான் தற்போது 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டைக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து வருவதாகவும் வேறு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்றே தெரியவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.