புதுக்கார் வாங்கிய ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்!

  • IndiaGlitz, [Friday,October 21 2022]

நடிகர் விஷாலின் தீவிர ரசிகரும் அறிமுக நடிகருமான ஒருவர் புதிய கார் வாங்கியதை அடுத்து அந்த காரை விஷாலிடம் காட்ட வந்த போது அவருக்கு விஷால் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அறிமுக நடிகரான சோமு விஷாலின் தீவிர ரசிகர் என்பதும் அவர் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி அந்த காரை விஷாலிடம் காண்பித்து ஆசி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் விஷாலின் மேனேஜரிடம் பேசிய போது விஷால் அந்த காரை எடுத்துக்கொண்டு நேரில் வருமாறு கூறியதாக தகவல் கிடைத்தது .

இதனையடுத்து தனது புதிய காரை விஷாலின் வீட்டிற்கு சோமு கொண்டு சென்றபோது விஷால் அந்த காரை பார்த்து சோமுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி உடனடியாக அந்த காரின் சாவியை வாங்கி சோமுவை வைத்துக்கொண்டு அவர் சில நிமிடங்கள் காரை ஓட்டினார். அதன்பிறகு அவர் தனது வாழ்த்துக்களை மீண்டும் கூறி விடைபெற்று சென்றார்.

புதிய காரை காண்பித்து ஆசி மட்டும் வாங்கலாம் என்று வந்த சோமுவுக்கு விஷால் அந்த காரை ஓட்டியது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

More News

டேஞ்சர் ஜோனில் 4 போட்டியாளர்கள்.. இந்த சீசனின் முதல் எலிமினேஷன் இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடைபெற உள்ளதை அடுத்து பார்வையாளர்கள் மத்தியில் முதல் நபராக வெளியேற்றப்படுவது

'போடீ...' ஆயிஷாவிடம் எல்லை மீறிய ஆண் போட்டியாளர்: பிக்பாஸ் நடவடிக்கை எடுப்பாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர் ஒருவர் ஆயிஷாவை பார்த்து 'போடீ...' என கூறியதை அடுத்து பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

கொட்டும் மழையில் மனைவியுடன் 'பிரின்ஸ்' படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

 சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இன்று அதிகாலை கொட்டும் மழையில் தனது மனைவி ஆர்த்தியுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் உள்ள திரையரங்கில்

ஹாலிவுட் த்ரில்லர் படத்தில் தமிழ் நடிகை.. படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

தமிழ் திரை உலகில் உள்ள பல நடிகர் நடிகைகள் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிரபல தமிழ் நடிகை ஒருவர் ஹாலிவுட்டில் தயாராகும் த்ரில்லர்

பூஜா ஹெக்டேவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த புகைப்படம்