close
Choose your channels

புதுக்கார் வாங்கிய ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்!

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷாலின் தீவிர ரசிகரும் அறிமுக நடிகருமான ஒருவர் புதிய கார் வாங்கியதை அடுத்து அந்த காரை விஷாலிடம் காட்ட வந்த போது அவருக்கு விஷால் இன்ப அதிர்ச்சி கொடுத்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அறிமுக நடிகரான சோமு விஷாலின் தீவிர ரசிகர் என்பதும் அவர் சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி அந்த காரை விஷாலிடம் காண்பித்து ஆசி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் விஷாலின் மேனேஜரிடம் பேசிய போது விஷால் அந்த காரை எடுத்துக்கொண்டு நேரில் வருமாறு கூறியதாக தகவல் கிடைத்தது .

இதனையடுத்து தனது புதிய காரை விஷாலின் வீட்டிற்கு சோமு கொண்டு சென்றபோது விஷால் அந்த காரை பார்த்து சோமுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி உடனடியாக அந்த காரின் சாவியை வாங்கி சோமுவை வைத்துக்கொண்டு அவர் சில நிமிடங்கள் காரை ஓட்டினார். அதன்பிறகு அவர் தனது வாழ்த்துக்களை மீண்டும் கூறி விடைபெற்று சென்றார்.

புதிய காரை காண்பித்து ஆசி மட்டும் வாங்கலாம் என்று வந்த சோமுவுக்கு விஷால் அந்த காரை ஓட்டியது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.