தற்கொலைக்கு முயன்ற நடிகருக்கு விஷால் செய்த உதவி

  • IndiaGlitz, [Friday,August 26 2016]

நேற்று இணையதளம் முழுவதும் வெளிவந்த ஒரு பரபரப்பான செய்தி துணை நடிகர் இளவரசனின் தற்கொலை முயற்சி என்பது அனைவரும் அறிந்ததே. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சிறுத்தை, சகுனி உள்பட பல படங்களில் நடித்துள்ள இளவரசனுக்கு பல தயாரிப்பாளர்கள் நடித்ததற்காக பணம் கொடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த இருந்த அவருக்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சிக்கு முன் விஷாலுக்கு தன்னுடைய நிலைமையை விளக்கி லட்டர் எழுதி வைத்துள்ள நிலையில் இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக விஷால் தனது ரசிகர் மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை மருத்துவமனைக்கு சென்று வழங்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை விஷாலின் தேவி அறக்கட்டளையின் மூலம் மருத்துவ உதவியாக வழங்கியுள்ளார். மேலும் அவருடைய கோரிக்கையை நடிகர் சங்கம் விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இளவரசனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இளவரசனின் பிரச்சனை தீர்வதோடு அவரது மனைவியும் மனம் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' ரிலிஸ் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக 50வது நாளை நோக்கி...

ஷங்கரின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியின் '2.0' படத்தில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் தயாரிக்கவுள்ள படம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது...

பாகுபலி'யை கொலை செய்த கட்டப்பாவின் ரகசியம் தெரிந்த 4 பேர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படம் கடந்த ஆண்டு வெளியானபோது படம் பார்த்தவர்களின் ஒவ்வொருவரின்...

இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ததை நினைத்தால் அருவருப்பு ஏற்படுகிறது. சேரன்

இயக்குனர் தியா இயக்கிய 'கன்னா பின்னா' படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை கமலா திரையரங்கில்...

விஷால்-மிஷ்கின் துப்பறிவாளன் படப்பிடிப்பு தொடங்கும் தேதி

விஷால், தமன்னா நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ...