close
Choose your channels

தற்கொலைக்கு முயன்ற நடிகருக்கு விஷால் செய்த உதவி

Friday, August 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று இணையதளம் முழுவதும் வெளிவந்த ஒரு பரபரப்பான செய்தி துணை நடிகர் இளவரசனின் தற்கொலை முயற்சி என்பது அனைவரும் அறிந்ததே. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சிறுத்தை, சகுனி உள்பட பல படங்களில் நடித்துள்ள இளவரசனுக்கு பல தயாரிப்பாளர்கள் நடித்ததற்காக பணம் கொடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த இருந்த அவருக்கு அவரது மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சிக்கு முன் விஷாலுக்கு தன்னுடைய நிலைமையை விளக்கி லட்டர் எழுதி வைத்துள்ள நிலையில் இந்த செய்தி அறிந்ததும் உடனடியாக விஷால் தனது ரசிகர் மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை மருத்துவமனைக்கு சென்று வழங்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி இளவரசனுக்கு ரூபாய் 10 ஆயிரத்தை விஷாலின் தேவி அறக்கட்டளையின் மூலம் மருத்துவ உதவியாக வழங்கியுள்ளார். மேலும் அவருடைய கோரிக்கையை நடிகர் சங்கம் விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இளவரசனுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இளவரசனின் பிரச்சனை தீர்வதோடு அவரது மனைவியும் மனம் மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.