பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் விஷால்

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

பெண் கல்வியின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்றும், பெண்கள் அனைவரும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்று மகாகவி சுப்பிரமணிய பாரதி கனவு கண்டார். தனது கனவு மெய்ப்பட வேண்டும் என்று அவர் கவிதை வடிவில் பாடியதை தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தன்னால் இயன்ற அளவுக்கு நிறைவேற்றி வருகிறார். சமீபத்தில் பெண் கல்விக்கு விஷால் உதவிய இரண்டு சம்பவங்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது. இதோ அந்த தகவல்கள்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த குழந்தை தெரேசா என்பவர் 2ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியில் B.Ed., படிப்பு படித்துவருகிறார். மேற்படி, அவர் கல்வி படிப்பை தொடரமுடியாத நிலையில் சிரமத்தில் இருப்பதை அறிந்த உடனே தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்கள் அவருடைய மேற்படிப்பிற்கு தனது தேவி அறக்கட்டளை முலம் உதவி செய்துள்ளார்.
அதேபோன்று போரூர் பகுதியை சேர்ந்த எஸ்தர் என்பவரின் மகள் சங்கீதா இவர் சார்ஜாவில் மருத்துவ படிப்பு படித்துவரும் நிலையில் இந்தவருடம் 4ம் ஆண்டு படிப்பை தொடரமுடியாத நிலையில் சிரமத்தில் இருப்பதை அறிந்த உடனே தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்கள் அவருடைய மேற்படிப்பிற்கு தனது தேவி அறக்கட்டளை முலம் உதவினார்.
மேற்கண்ட இரு மாணவிகளும் அவர்களது குடும்பத்தினர்களும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். விஷாலின் சமூக நல தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

More News

நயன்தாராவின் 'அறம்' படத்தின் மெயின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வரும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அவருடைய பிறந்த நாளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் படத்திற்கு 'அறம்' டைட்டில் ஏன்?

இன்று பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ள நயன்தாரா நடிக்கும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்..

இன்று நயன் தாராவுக்கு ஸ்பெஷல் பிறந்த நாள். எப்படி தெரியுமா?

ஒரு மாஸ் நடிகரின் பிறந்த நாளில் அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அசத்துவார்கள்....

ஆஸ்கருக்கு வெகு அருகில் 'விசாரணை'

சிறைகளிலும் காவல்துறை விசாரணைகளிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டிய விசாரணை திரைப்படம்...

ஜி.வி.பிரகாஷின் 'கிக்'ஐ பாராட்டிய இளையதளபதி

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...