விஜய்வசந்துக்கு விஷால் செய்யும் உதவி

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் நாடோடிகள், கனிமொழி, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்வசந்த் கிராமத்து இளளஞன் வேடத்தில் நடித்து வருகிறார். ஸ்ருஷ்டி டாங்கே இந்த படத்தின் நாயகியாகவும், மற்றொரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் நடித்து வருகின்றனர்.

ராஜபாண்டி இயக்கும் இந்த படத்தை வினோத் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவுள்ளதாகவும், இந்த டீசரை விஷால் வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

விஜய்சேதுபதியின் 'றெக்க' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி-நேரம் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி நடித்த 'இறைவி' மற்றும் 'தர்மதுரை' விரைவில் வெளியாகவுள்ளது.

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' டிராக் லிஸ்ட்

ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது...

'காக்கா முட்டை-ஆண்டவன் கட்டளை' என்ன வித்தியாசம். விளக்குகிறார் மணிகண்டன்

தனுஷ் தயாரித்த 'காக்கா முட்டை' என்ற ஒரே படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன்.....

'கோ 2' ஆதரிக்கும் கட்சி எது? விளக்குகிறார் இயக்குனர் சரத்

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரியான 3 நாட்களுக்கு முன்னர் அதாவது மே 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரசியல் படம் 'கோ 2' தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....