close
Choose your channels

விஜய்வசந்துக்கு விஷால் செய்யும் உதவி

Wednesday, May 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் நாடோடிகள், கனிமொழி, பிரியாணி உள்பட பல படங்களில் நடித்த நடிகர் விஜய்வசந்த் தற்போது 'அச்சமின்றி' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்வசந்த் கிராமத்து இளளஞன் வேடத்தில் நடித்து வருகிறார். ஸ்ருஷ்டி டாங்கே இந்த படத்தின் நாயகியாகவும், மற்றொரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் நடித்து வருகின்றனர்.

ராஜபாண்டி இயக்கும் இந்த படத்தை வினோத் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி அமரன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவுள்ளதாகவும், இந்த டீசரை விஷால் வெளியிடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.