'ஊருக்கு நீ போலீஸா இருக்கலாம், எனக்கு நீ போக்கிரி தான்.. விஷாலின் 'லத்தி' டிரைலர்

  • IndiaGlitz, [Monday,December 12 2022]

விஷால் நடிப்பில் உருவான ‘லத்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரைலரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கொஞ்சம் ரொமான்ஸ் மற்றும் தந்தை-மகன் பாசக் காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளன.

முடிவு பெறாத கட்டிடம் ஒன்றில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன என்பதும் விஷால் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்காகவே அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியில் இருந்து தெரியவருகிறது

விஷாலுக்கு இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அசத்தலாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் பாடல்களும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்த படத்தை வினோத்குமார் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

More News

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்..  பிரைடல் ஸ்டுடியோவை திறந்து வைத்த லெஜண்ட் சரவணன் பேட்டி!

கடுமையாக உழைப்பவர்களை நேசிப்பவன் நான் என்றும், மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும் கோவையில் பிரைடல் ஸ்டுடியோவை திறந்து வைத்து நடிகர் மற்றும் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கூறியுள்ளார். 

ரஜினிகாந்த் பிறந்த நாள்: முதல்வர் முதல் எடப்பாடி வரை.. கமல் முதல் சரத்குமார் வரை.. குவியும் வாழ்த்துக்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்த விவகாரம்.. வேற லெவல் விளக்கம் அளித்த ராம்கோபால் வர்மா!

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா நடிகை ஒருவரின் காலை முத்தமிட்ட வீடியோ இணையதளத்தில் வைரல் ஆன நிலையில் அந்த வீடியோ கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

சென்னை மெட்ரோவில் தளபதி விஜய்யின் 'வாரிசு': வேற லெவல் புரமோஷன்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதை பார்த்தோம். 

ஒரு ஜீன்ஸ் விலை சுமார் ஒரு கோடி ரூபாயா? அப்படி என்ன இருக்கு அதில்?

அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் நடந்த ஏலம் ஒன்றில் ஒரு ஜீன்ஸ் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஏலம் போனதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.